Saturday, 26 October 2013

செயற்கை முறை குஞ்சு பொரித்தல்



1. கிராமப் பகுதிகளில் எளிதாக கிடைக்கும் அட்டைப்பெட்டி அல்லது சாந்துச்சட்டி அல்லது பழைய மண்பானை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து அதனுள் பாதி அளவிற்கு அரிசித் தவிடு அல்லது மணலை நிரப்பவும்.
2. இவ்வாறு நிரப்பப்பட்ட அரிசித் தவிடு அல்லது மணலின் மீது குஞ்சு பொரிக்க வேண்டிய கோழி முட்டைகளை வைக்கவும்.
3. வட்டத்தட்டினுள் பொருத்தப்பட்ட 15 வாட் முதல் 40 வாட் வரையிலான மின்சார பல்பினை தவிடு அல்லது மணலின் மீது பரப்பப்பட்ட முட்டைகளின் மேல் சீரான வெப்பம் பரவத்தக்க வகையில் தொங்கவிடவும்.
4. 100 டிகிரி பார்ஹீன் அளவு சீரான வெப்பம் தரத்தக்க வகையில் மின்சார பல்புக்கும், கோழி முட்டைகளுக்கும் இடையே உள்ள தூரத்தை அவ்வப்போது தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்ளவும்.
5. உடல் வெப்ப நிலையைக் கணக்கிடக்கூடிய வெப்பநிலைமானியை பயன்படுத்தி கோழி முட்டையின் மீது சீரான வெப்பம் பரவச் செய்யும் வகையில் கண்காணித்துக்கொள்ளலாம்.
6. முட்டைகளை முதல் நாள் முதல் 17வது நாள் வரை ஒரு நாளைக்கு 3 முறை வீதம் அதாவது 8 மணி நேரத்திற்கு ஒருமுறை திருப்பி விடவேண்டும்.
7. 18வது நாள் முட்டைகளைத் திருப்பி விடுவதை நிறுத்திவிட வேண்டும்.
8. 18வது நாள் முதல் ஈரப்பதம் 80% வரை தேவைப்படுவதால் வெது வெதுப்பான நீரில் நனைத்த பருத்தி துணியை முட்டைகளின்மீது 1 நிமிடம் பரப்பி விடவும். இவ்வாறு 18 வது நாள் முதல் 22வது நாள் வரை ஒரு நாளைக்கு 3 முறை செய்தால் குஞ்சு பொரிப்புத் திறன் நன்கு இருக்கும்.
9. மின்சாரத் தடை ஏற்பட்டு வெகு நேரம் ஆகிவிட்டால் சற்றே சூடு செய்யப்பட்ட தவிட்டின் மூலம் முட்டைகளை மூடி வைத்து விடவும்.
10. இந்த எளிய முறையை வாத்து, வான் கோழி, கினிக் கோழி மற்றும் காடை முட்டைகளை பொரிக்கச் செய்யவும் பயன்படுத்தலாம்

நன்மைகள்:
1. அடைக்கோழிகள் இல்லாமல் அடைமுட்டைகளை அதிக அளவில் குஞ்சு பொரிக்க செய்ய இயலும்.
2. அடைக்கோழிகள் அடை அமரும் குணம் விரைவில் மாறி முட்டையிட தொடங்கும்.
3. வாத்து முட்டைகளை குஞ்சு பொரிக்க அடைக்கோழிக்காக அலைய வேண்டியதில்லை.
4. இவ்வாறு செயற்கை முறையில் குஞ்சு பொரிக்கச் செய்தால் ஒரே நேரத்தில் நாட்டுக் கோழிகளின் எண்ணிக்கையையும் பெருகச் செய்யலாம்.

நாட்டுக் கோழி வளர்ப்பு


  • நாட்டுக் கோழி வளர்ப்பு - நாட்டு கோழிகள் என்பது புறக்கடையில் அதாவது வீட்டை சுற்றியுள்ள இடத்தில் சுற்றி திரிந்து கிடைக்கும் பூச்சி , புழு மற்றும் சிதறிய தானியங்கள் ஆகியவற்றை உண்டு வளர்ந்து வருபவை. இது பழங்காலத்தில் நம் முன்னோர்களால் வீட்டின் புரத தேவைக்காக மேற்கொள்ளப்பட்ட முறையாகும்.
  • பழங்கால முறைகளில் உள்ள குறைகளை களைந்து ஒரு சிறப்பான லாபகரமான முறையை பின்பற்றி நாட்டு கோழி வளர்ப்பில் நல்ல லாபம் அடையலாம்
  • நாட்டு கோழிகளில் குஞ்சுககளை பருந்து, காகம் மற்றும் கீரி போன்றவைகள் வேட்டையாடி இழப்புகளை ஏற்படுத்தும். இதனை சரி செய்ய குஞ்சுகள் பிறந்து ஒரு மாதம் வரை தாய்கோழியையும் குஞ்சுகளையும் வெளியே அதிகம் விடாமல் ஒரு சின்ன கொட்டகையே உருவாக்கி வளர்த்தலாம்.
  • நாட்டு கோழி வளர்ப்பில் தீவனம் சரியான அளவில் மற்றும் சரியான விகிதத்தில் கொடுக்கலாம். சோளம் , உடைந்த அரிசி மற்றும் கரையான்களை உற்பத்தி செய்து கொடுக்கலாம்.
  • புழு மற்றும் பூச்சிகள் கிடைக்காத கோடை மாதங்களில் கோழிகளில் வளர்ச்சி குறைவு, முட்டைகள் குஞ்சு ப் பொரிக்கும் விகிதம் குறைவு மற்றும் பிறந்த குஞ்சுகளின் இறப்பு ஆகியவை காணப்படும். இவையனைத்தும் புரத சத்து குறைப்பாட்டினால் ஏற்படுகிறது. இதை சரி செய்ய ஒரே சிறந்த மற்றும் எளிய முறை கரையான் உற்பத்தி மட்டுமே. இதை சொடுக்கி தெரிந்து கொள்ளவும்.
  • நாட்டு க் கோழி வளர்ப்பில் குடற்புழு நீக்கம் மற்றும் கோழிக் கழிச்சல் தடுப்பூசி ஆகியவற்றை கால்நடை மருத்துவரின் ஆலோசனை படி தவறாமல் தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும்

கோழி பண்ணை அமைப்பது எப்படி?



சத்துக்களை அள்ளித் தரும் ஆரோக்கியமான உணவு முட்டை. மாணவர்கள் சத்துணவிலும் வழங்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் கூட, மஞ்சள் கருவை தவிர்த்துவிட்டு வெள்ளைக் கருவை சாப்பிடலாம். தேவை அதிகம் இருப்பதால், கோழிப்பண்ணை அமைத்து முட்டை உற்பத்தி செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்:

நான் ஒரு விவசாயி. பாசன நீர் பற்றாக்குறை காரணமாக முட்டைக்கோழி வளர்ப்பை பிரதான தொழிலாக செய்து வருகிறேன். இதற்கு வங்கிக் கடன் உதவி எளிதாக கிடைப்பதால், பண்ணை அமைத்து கூண்டு முறையில் 24 ஆயிரம் கோழிகளை வளர்க்கிறேன். கோழி வளர்ப்பில் முதல் வளர்பருவம் வரை உற்பத்தி செலவுக்கு முதலீடு இருந்தால் போதும். முட்டைப்பருவ காலத்தில் கிடைக்கும் முட்டைகளை விற்று அதன்மூலம், அடுத்தடுத்த உற்பத்தி செலவுகளை சமாளிக்கலாம். அரவை இயந்திரம் வாங்கி தீவனத்தை நாமே அரைத்து கொண்டால் செலவு மிச்சமாகும். தீவனத்துக்கு தேவையான தானியங்கள் விலை குறையும்போது வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

நாமக்கல், பல்லடம் ஆகிய இடங்களில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு உள்ளது. இங்கு திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் மொத்த முட்டை கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. வியாபாரிகள் நேரில் வாங்கி செல்கின்றனர். சில நேரங்களில் நல்ல லாபமும், சில நேரங்களில் குறைந்த லாபமும் கிடைக்கும். முறையாக வளர்த்தால், கோழி இறப்பு, முட்டை உற்பத்தி குறைவு ஆகியவற்றை தவிர்க்கலாம். ஒரு கோழி வாரத்தில் 6 நாள் முட்டை இடுவதால், தினசரி நல்ல வருவாய் பார்க்கலாம்.

வெளிநாடுகளுக்கு சிலர் மட்டுமே ஏற்றுமதி செய்கிறார்கள். முட்டைகளை தரப்பரிசோதனை செய்து தகுதியான முட்டைகளை அனுப்பினால் ஏற்றுமதியிலும் ஜொலிக்கலாம். கோழிப்பண்ணைகளுக்கு மின் கட்டணம் வணிக கட்டண பிரிவின் கீழ் விதிக்கப்படுகிறது. கோழி வளர்ப்பை மேம்படுத்த பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரி வருகிறோம்.

எப்படி வளர்ப்பது?

முட்டைக்கோழிகளை வளர்க்க ஆழ்கூளம், கூண்டு வளர்ப்பு என 2 முறைகள் உள்ளன. கூண்டுகளில் வளர்ப்பதே சிறந்தது. குஞ்சு பொரித்தது முதல் 8 வாரம் வரை குஞ்சு பருவம். அதற்கடுத்த 8 வாரங்கள் வளர் பருவம், பின்னர் 56 வாரங்கள் முட்டை உற்பத்தி பருவம். 3 பருவ கோழிகளையும் தனித்தனி கூண்டுகளில் வளர்க்க வேண்டும். கூண்டுகளில் கோழிகளின் பருவத்துக்கு ஏற்ப வெப்பம், காற்றோட்டம், ஈரப்பதம் இருக்குமாறு வசதி ஏற்படுத்த வேண்டும். குஞ்சு பருவத்தில் தீவனம் வீணாவதை தடுக்கவும், ஒன்றையொன்று கொத்திக் கொள்ளாமல் இருக்கவும் அதன் அலகுகளை 7 முதல் 10 நாட்களுக்குள் வெட்ட வேண்டும்.

குஞ்சு பருவத்தில் நோய் எதிர்ப்பு சக்திக்கு சுத்தமான தண்ணீரில் வைட்டமின் கே, சி மற்றும் சோடியம் சாலிசிலேட் கலந்து கொடுக்க வேண்டும். தடுப்பூசிகள் போட வேண்டும். சோயா, கம்பு, மக்காச்சோளம், கருவாடு, கிளிஞ்சல்கள் ஆகியவற்றுடன் நுண்ணூட்ட சத்துகள் நிறைந்த கலவை தீவனம் கொடுக்க வேண்டும். குஞ்சுப்பருவத்தில் குருணை தீவனம் கொடுப்பது எடையை அதிகரிக்கும்.

600 கிராம் எடையுடன் இருக்கும். குஞ்சு, வளர் பருவத்தில் 1100 கிராம் எடையை அடையும். முறையாக பராமரித்தால் 60 கிராம் எடையுள்ள முட்டைகளை கோழி இடும். ஒரு கோழி வாரத்துக்கு 6 முட்டை இடும். அதை விற்பனைக்கு அன்றன்றே அனுப்பிவிட வேண்டும்.

ஆலோசனை பெறலாம்!

கால்நடை பராமரிப்பு துறையின் மாவட்ட கால்நடை வளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி மையங்களில் முட்டைகோழி வளர்ப்பு தொடர்பான அறிவுரைகள், ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் அளிக்கின்றனர். முட்டை கோழிக் குஞ்சுகள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களின் தலைமை இடங்கள் நாமக்கல், பல்லடம், பொங்கலூர் ஆகிய இடங்களில் உள்ளது. இவற்றின் கிளைகள் முக்கிய நகரங்களில் உள்ளன. அங்கு கோழிக் குஞ்சுகளை வாங்கலாம். அங்கு கோழித் தீவன உற்பத்தியாளர்கள், கூண்டு தயாரிப்பவர்கள் மற்றும் கோழி வளர்ப்பு குறித்த விவரங்களை அளிக்கின்றனர்.

கட்டமைப்பு வசதிகள்

கூண்டு முறையில் முட்டைக் கோழி வளர்க்க 42க்கு 30 அடி நீள, அகலமுள்ள 3 கட்டிடங்கள் தேவை. இவற்றில் தலா 2 ஆயிரம் கோழி வீதம் 6 ஆயிரம் கோழி வளர்க்கலாம். கட்டிடத்துக்கு மொத்தம் ரூ.4.5 லட்சம் செலவாகும். 3 கட்டிடத்துக்கும் கூண்டு அமைக்க தலா ரூ.30 ஆயிரம் வீதம், ரூ.90 ஆயிரம் செலவாகும். கட்டிடத்தில் 3 அடுக்குகளை கொண்ட 6 இரும்பு கூண்டுகள் பொருத்த வேண்டும். மொத்தம் 18 அடுக்குகள் அமையும். 2 ஆயிரம் கோழிகள் இடம்பெறும். தீவனம் இருப்பு வைக்கவும், முட்டைகளை அடுக்கவும் தனித்தனி அறைகள் அமைக்க வேண்டும். கட்டமைப்புக்கு மொத்தம் ரூ.5.4 லட்சம்.

உற்பத்தி செலவு

குஞ்சு விலை சராசரி ரூ.21 வீதம் 2 ஆயிரம் குஞ்சுகள் ரூ.42 ஆயிரம். தீவனம் ஒரு கோழிக்கு 50 கிலோ தேவை. தீவனம் கிலோ விலை ரூ.15. 2 ஆயிரம் கோழிக்கு ரூ.15 லட்சம். தடுப்பு மருந்து உள்ளிட்ட பராமரிப்பு செலவுகள் ரூ.10 வீதம் ரூ.20 ஆயிரம். ஒரு வேலையாளுக்கு தினசரி ரூ.350 வீதம் ரூ.89 ஆயிரம் சம்பளம். மின் கட்டணம் ரூ.13 ஆயிரம் என உற்பத்தி செலவுக்கு மொத்தம் ரூ.16.64 லட்சம் தேவை.

வருவாய் எவ்வளவு?

ஒவ்வொரு கோழியும் வளர்ந்த 17வது வாரத்தில் இருந்து 72வது வாரம் வரை முட்டை இடும். முட்டையிடும் பருவமான 55 வாரங்களில் (385 நாட்களில்) 320 முட்டைகள் இடும். முட்டை சராசரி விலை ரூ.2.50. 2 ஆயிரம் கோழிகள் மூலம் முட்டை விற்பனை வருவாய் ரூ.16 லட்சம். 72 வார முடிவில் வயதான முட்டை கோழிகள் விற்பனை 2 ஆயிரம் கோழிகள்(3500 கிலோ எடை) கிலோ ரூ.50 வீதம் வருவாய் ரூ.1.75 லட்சம். கோழி எரு தலா 15 கிலோ வீதம் 2 ஆயிரம் கோழிகள் மூலம் 30 டன் கிடைக்கும். இதன் மூலம் ரூ.24 ஆயிரம் வருவாய். மொத்த வருவாய் ரூ.17.99 லட்சம். லாபம் ரூ.1.35 லட்சம். முட்டை, எரு, கோழி விலை கூடினால் லாபமும் அதிகரிக்கும்.

சந்தை வாய்ப்பு!

தமிழகத்தில் முட்டை உற்பத்தி பெரும்பகுதி நாமக்கல்லிலும், ஓரளவு கோவை, திருப்பூர் மாவட்டத்திலும் உள்ளது. பரவலாக முட்டை உற்பத்தி மேற்கொண்டால் அந்தந்த பகுதிக்குரிய தேவையை பூர்த்தி செய்யலாம். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். முட்டை கோழி எரு ரசாயன உரத்துக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. ரப்பர், தேயிலை தோட்டங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. கோழி எருவை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். முட்டை பருவம் முடிந்த கோழிகளை வியாபாரிகளிடம் விற்கலாம்.

ஆடு வளர்த்தால் தொழிலதிபர் ஆகலாம் ...

கிராமப்புற மக்களின் வாழ்க்கை இயற்கையோடு பின்னிப் பிணைந்த ஒரு இன்பமான வாழ்க்கை. விவசாயம் செய்து மரம், செடி, கொடி பயிர்களோடு நாள்தோறும் வாஞ்சையோடு பேசி மகிழ்பவர்கள் கிராமப்புற மக்கள். அதே போல பறவை, விலங்குகள் ஒவ்வொன்றோடும் நட்பு கொள்பவர்கள் அவர்கள்.

விவசாயம் எப்படி அவர்களின் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டதோ அதே போல கால்நடை வளர்ப்பு என்பதும் அவர்களின் வாழ்வு முறையில் ஓர் அங்கமாகி விட்டது. எந்த ஓர் எதிர்பார்ப்பும் இல்லாமல் நேசம் சார்ந்த முறையில் பழக்கப்பட்ட கால்நடை வளர்ப்பானது இன்று அவர்களின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்ய ஒரு வழியைக் காண்பிக்கும் தொழிலாகப் பரிணாமம் அடைந்திருக்கிறது.

இந்த வகையில் ஆர்.மனோகர் என்பவர் வெள்ளாடு வளர்ப்பின் மூலம் ஒரு பெரிய தொழிலதிபராகவே உயர்ந்திருக்கிறார். அவர் தன் வெள்ளாடு வளர்ப்பு அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.


நான் 1994ல் ஒரு கோழிப் பண்ணை தொடங்கினேன். அந்த சமயத்தில் கோழிகளை பலவித நோய்கள் தாக்கியதால் அதிகமான நட்டத்தை அடைந்தேன். இதனால் ஆட்டு பண்ணை வைக்கலாமே என யோசித்தேன். ஆடுகள் வெட்டிய தலையை மீட்கும் என்பார்களே. அதன்படி 1995ம் ஆண்டில் 3 தலைச்சேரி ஆடுகளை 1 குட்டி ரூ.1500 என கேரளாவிலிருந்து வாங்கி வந்தேன். 1996ம் ஆண்டில் மாட்டுப் பண்ணையும் வைத்துப் பார்க்கலாமென 40 மாடுகளை வாங்கி வந்தேன். இந்த மாடுகளின் மூலம் சுமாரான லாபம் கிடைத்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை.

எனவே ஆட்டுப் பண்ணை தான் நமக்குத் தோதான தொழில் என்று முடிவெடுத்து ஆட்டுப் பண்ணையை விரிவுபடுத்த விரும்பினேன். மாடுகளைக் குறைத்து ஆடுகளைப் பெருக்கினேன். ஒரே ஆண்டில் 100 தலைச்சேரி ஆடுகளை வாங்கி வளர்த்தேன். இந்த 100 ஆடுகளிலிருந்து 400 ஆடுகள் உற்பத்தி ஆயின.

இந்த தலைச்சேரி ரகமானது மாதத்திற்கு 4 கிலோ அளவிற்குத் தான் வளரும். இதைவிட அதிக எடையுடன் வளரும் ரகம் என்னவென்று கேட்டறிந்து போயர் ரக ஆடுகளை கேரளாவிலிருந்து ஒரு ஜோடி வாங்கி வந்தேன். ஒரு ஜோடி 60,000 ரூபாய்க்கு வாங்கப்பட்டது. போயர் ரக கிடாவோடு, தலைச்சேரி பெட்டை ஆட்டை இணைத்து கலப்பினக் குட்டிகளை உற்பத்தி செய்தோம்.

இந்தக்குட்டிகள் மாதத்திற்கு 6 கிலோ எடை வளர்ச்சி அடையும் தன்மை உடையவை. தற்போது என்னிடம் மொத்தம் 600 ஆடுகள் இருக்கின்றன. இதில் போயர் 100, சுரோகி 10, தலைச்சேரி 400. தலைச்சேரி ஆடுகளை தமிழ்நாடு முழுவதிலுமிருந்து வளர்ப்புக்காகவும், இறைச்சிக்காகவும் வந்து எங்களிடம் வாங்கிச் செல்கிறார்கள். தலைச்சேரி ஆடுகளை உயிர் எடை ஒரு கிலோ ரூ.200 எனக் கொடுக்கிறோம். 40 கிலோ எடை கொண்ட போயர் இன ஆடுகளை ரூ.3000க்கு கொடுக்கிறோம். 20லிருந்து 81 கிலோ வரை எடை கொண்ட சுரோகி இன ஆடுகளை ரூ.5000லிருந்து 20,000 வரைக்கும் விற்பனை செய்கிறோம்.

ஒரு தலைச்சேரி ஆட்டிலிருந்து ஆண்டுக்கு 4 குட்டிகள் கிடைக்கும். 25 கிலோ எடையுள்ள இந்தக் குட்டிகளை இறைச்சி விற்பனைக்காக கிலோ ரூ.125 எனக் கொடுத்து எடுத்துச் செல்கிறார்கள். இதன் மூலம் 1 தலைச்சேரி ஆடு ஆண்டுக்கு 12,500 ரூபாயை வருமானமாகக் கொடுக்கிறது.

ஒரு ஆட்டுக்குப் பராமரிப்பு செலவு ஆண்டுக்கு 4000 ஆகிறது. மீதி 8500 லாபமாகக் கிடைக்கிறது. 50 ஆடுகளுக்கு பசுந்தீவனமிட 1 ஏக்கர் நிலம் தேவைப்படும். நோய் ஏதேனும் தென்பட்டால் நோயைப் பொறுத்து தடுப்பூசி போட வேண்டும்.

ஆடு வளர்ப்பில் 60 நாட்களுக்கொரு முறை குடற்புழு நீக்கம் செய்வது மிகவும் முதன்மையானது. வாய் வழியே பூச்சி மருந்து கொடுத்து குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். குடற்புழு நீக்கம் செய்யவில்லை என்றால் ஆடுகளின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்கள் பெருகும்.

ஆடுகளுக்குக் கொட்டகை அமைக்கும் போது சுகாதாரமான, நல்ல காற்றோட்டமான முறையில் அமைக்க வேண்டும்

பரண் மேல் ஆடு வளர்ப்பு

  • வெள்ளாடுகளை அதிக எண்ணிக்கையில் வளர்க்க சிறந்த முறை பரண் மேல் வளர்க்கும் முறையாகும்.
  • பரண் மேல் ஆடு வளர்ப்பில் ஆடுகள் மரத்தினால் ஆன பரண் போன்ற அமைப்பின் மேல் வளர்க்கப்படுகிறது.
  • பரண் மேல் ஆடு வளர்ப்பு கொட்டகை தரையிலிருந்து உயரமான இடத்தில் குறைந்த்து 4 - 5 அடி உயரத்தில் இருப்பதால் ஆட்டு சாணி மற்றும் சிறுநீர் போன்றவை கீழே சேகரமாகிறது. ஆதலால் தினமும் சுத்தம் செய்யும் பணி மிகவும் குறைவாக இருக்கிறது.
  • பரண் மேல் ஆடு வளர்ப்பு முறையில் வளர்ப்பதால் ஆடுகள் சுகாதரமாகவும் நோய் பரவும் தன்மை குறைவாகவும் இருக்கும்.
  • வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் கொட்டகையிலே பசுந்தீவனம் மற்றும் அடர்தீவனம் அளிக்கப்படுகிறது.
  • வெள்ளாடுகளுக்கு ஏற்ற பசுந்தீவன பயிர்கள்- கோ 3 , கோ 4, கோ எப் எஸ் 29 , அகத்தி, கிளிசீடியா, வேலி மசால்.
  • வெள்ளாடுகளுக்கு அளிக்க வேண்டிய தடுப்பூசிகள் - ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி (PPR ), துள்ளுமாரி நோய் தடுப்பூசி (ET)மற்றும் கோமாரி நோய் தடுப்பூசி (FMD). கால்நடை மருத்துவர்களை அணுகி தகுந்த நேரத்தில் தடுப்பூசிகளை போட்டு கொள்ளலாம்.
  • வெள்ளாடுகளுக்கு குடற்புழுநீக்கம் செய்யும் முறை. --- புதிதாக வாங்கி வரும் வெள்ளாடுகளை தனியாக பிரித்து வைத்து குடற்புழு நீக்கம் செய்த 15 நாட்களுக்கு பிறகே பண்ணை வெள்ளாடுகளுடன் சேர்க்கவேண்டும். குடற் புழு நீக்க மருந்துகளில் பலவகை உண்டு. அவைகளை கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சுழற்சி முறையில் கொடுக்கவேண்டும். அப்போது தான் அனைத்து வகையான குடற்புழுக்களை நீக்கமுடியும். வெள்ளாட்டு குட்டிகள் பசுந்தீவன உண்ண ஆரம்பித்த உடனே குடற்புழுநீக்க மருந்துகளை கால்நடை மருத்துவரின் ஆலோசனை படி சரியான கால இடைவெளியில் கொடுக்கவேண்டும்.
  • பரண் மேல் ஆடு வளர்ப்பு பண்ணை அமைக்கும் முன் ஒன்றுக்கு மேற்பட்ட 3 ஆண்டுகளுக்கு மேல் பராமரிக்கப்பட்டு வரும் பண்ணைகளை பார்வையிடுவதும் வெள்ளாட்டு பண்ணையாளர்களை கலந்தலோசிப்பதும் நல்லது.
  • பரண் மேல் ஆடு வளர்ப்பு பண்ணைகளில் ஆடுகளை விடுவதற்கு முன்பே பசுந்தீவன பயிர்களை பயிரிட்டு தயார் நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும்.
  • ஆட்டு பண்ணை வளர்ப்பு




    மனிதன் முதன் முதலில் வீடுகளில் வளர்க்கத் துவங்கிய பிராணி ஆடு ஆகும். இது ஏழைகளின் பசு என்று அழைக்கப்படுகிறது.

    ஏனென்றால் ஆட்டின் இறைச்சி மிருதுவானதாகவும், குறைவான கொழுப்புச் சத்தையும் கொண்டுள்ளது. எனவே இது எல்லோராலும் விரும்பி உண்ணப்படுகிறது. ஆட்டிறைச்சியின் விலை உயர்வாக இருந்தாலும் அதன் தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.பண்ணை அமைத்து தீனி போட்டு வளர்த்தால் அதிக லாபத்தை ஈட்ட முடியும்.

    ஆடுகள் விரைவில் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. இரண்டிரண்டாகவோ, மூன்று மூன்றாகவோ குட்டிகளை ஈனும் தன்மை படைத்தவை.

    ஆடுகளை வாங்கி பண்ணைகளை அமைப்பதற்கு குறைவான முதலீடு போதுமானதாகும். ஒரு கலப்பின மாடு வாங்குவதற்கு தேவையான தொகையைக் கொண்டு தரமான 10 ஆடுகளை வாங்கிவிடமுடியும்.

    ஆடுகளையும், அதன் குட்டிகளையும் எந்த நேரத்திலும் விற்று பணமாக மாற்றிவிட முடியும். அவைகள் நம்மிடமுள்ள (BLANK CHEQUES) வெற்று காசோலைகளைப் போல.

    ஆடுகள் குறுகிய கர்ப்ப காலம் கொண்டவை. (குறுகிய கருத்தங்கல் காலம்)

    நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் குறைவு. பண்ணை உணவு முறையைக் கொண்டுள்ளதால் மருத்துவத்திற்கும், மருந்திற்கும் மிகக் குறைவாகவே செலவாகும்.

    60 சதவீத ஆடுகள் ஆண்டு தோறும் அறுக்கப்படுகிறது. இருந்தாலும் அதன் இனப்பெருக்கம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

    இறைச்சி, பால், உரம், தோல் & பளபளக்கும் மிருதுவான முடி போன்றவைகளுக்காக ஆடுகள் வளர்க்கப்படுகின்றன.

    உயிருள்ள ஆடுகள், அறுக்கப்பட்ட ஆடுகள், ஆட்டிறைச்சி, தோல் போன்றவைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டமுடியும். பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி விவசாயம் செய்வதால் நிலங்கள் தரிசாக மாறிப்போகின்றன. நகரங்களும், கிராமங்களும் வேகமாக விரிவடைந்து வருகின்றன. இதனால் மேய்ச்சல் நிலங்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன. எனவே பண்ணைகளை அமைத்து ஆடுகளை இனப்பெருக்கம் செய்யவேண்டியதன் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

    ஆடுகள் உயிர் வாழும் காலம் = 15 ஆண்டுகள். வாழ்வில் இனப்பெருக்கம் செய்வதில் கழியும் மொத்த காலம் = 7 ஆண்டுகள். கர்ப்ப காலம் {மொத்தம் = 150 நாட்கள்}+/- 2 நாட்கள்.

    முதிர்ச்சியடைந்த ஒரு ஆடு ஒரு நாளில் வெளியேற்றும் உரம் = 1 KG.

    முறையான பராமரிப்பின் மூலம் இறப்பு விகிதத்தை 3 சதவீதமாக குறைக்க முடியும். நோயிலிருந்து காக்கவும், வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றவும் சரியான காலக்கெடுவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்திய ஆட்டிறைச்சி உலகம் முழுவதும் விரும்பி உண்ணப்படுகிறது.

    ஆட்டுப்பண்ணை வளம் கொழிக்கும் ஒருங்கிணைந்த விவசாயம்:
    பண்ணையில் தீவனம் உண்ணும் ஆடுகள் "செறிவுள்ள ஒருங்கிணைந்த விவசாய முறை (Intensive Integrated Farming System - IIFS)"யின் கீழ் வருகின்றன. ஆடு போன்ற சிறிய பிராணிகளைக்கொண்டு சிரமமின்றி பண்ணைகளை பராமரிக்க முடியும். அவைகள் பயிர்களின் எச்சங்களை உண்டு தரமான இயற்கை உரங்களை வெளியேற்றுகின்றன. ஏராளமான விவசாயிகள் ஆட்டுப் பண்ணைகள் அமைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். செறிவுள்ள ஒருங்கிணைந்த விவசாய முயற்சி வளம் கொழிக்கும் இலாபகரமான தொழிலாகும்.

    ஆடுகள் சத்தான தானியங்களின் எச்சங்களையும், தாவரங்களின் தண்டுகளையும் விரும்பி உண்கின்றன. அதிலும் குறிப்பாக, அவைகளை புல் போன்ற பசுமையான தீவனங்களுடன் கலந்து கொடுத்தால் அதன் உண்ணும்கம்பு மற்றும் புண்ணாக்கு கலந்து தயாரிக்கப்படுகிறது. தீவனத்திற்கு ஆகும் செலவு மற்றும் ஆடிடையன் (பணியாள்) மேய்ப்பு, தீவனமிடுதல், அது சார்ந்த பிற வேலைகளையும் கவனித்துக் கொள்வதால் ஆடு வளர்ப்பின் அசல் தொகை மிகக் குறைவாகும். ஆட்டின் வளமான உரம் (கழிவு) மீன் பண்ணைகளுக்கும், மற்ற விவசாயப் பயிர்களுக்கும் மிகச் சிறந்ததாகும். மண்புழு உரம் தயாரிக்க மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆர்வம் இன்னும் அதிகரிக்கும். சிறப்பு ஆட்டுத் தீவனங்கள்

    பால்பண்ணை அமைப்பதற்கு ஆகும் முதலீட்டை விட குறைவான முதலீடு ஆட்டுப் பண்ணைக்கு போதுமானதாகும். சிறிய பண்ணை அமைத்து ஆடுகளை பராமரிக்க முடியும். ஒரு முதிர்ந்த ஆட்டுக்கு ஒரு சதுர மீட்டர் இடம் போதுமானதாகும். விவசாய நிலம் இல்லாதவர்களும், சிறு மற்றும் குறுந்தொழில் மட்டுமே செய்ய முடியும் என்று நினைப்பவர்களும் இதனை தாராளமாக தொடங்கலாம். முறையான தீனியும், பராமரிப்பும் உள்ள பால் கறக்கும் ஆட்டிலிருந்து தினமும் தோராயமாக 2 லிட்டர் வரை பால் தரும். இது குறைவான பால் தரும் ஒரு நாட்டுப்பசுவிற்கு சமமாகும். பெண் ஆடு ஒவ்வொரு முறை குட்டிகளை ஈனும் பொழுதும் 2-4 குட்டிகளை ஈனும். (கருத்தங்கள் காலம் குறைவான 150 நாட்கள் மட்டுமே)

    சாணென், டோக்கன்பர்க், அங்கோரா, ஆங்கிலோ-நுபியன், பிரிட்டிஷ்-அல்பைன், பிரென்ச் -அல்பைன் போன்ற வெளிநாட்டு ரகங்கள் இந்திய சீதோஷ்ன நிலைக்கு உகந்தவை. இவைகளுடன் உயர் ரக இந்திய ஆடுகளின் மூலம் கலப்பினப் பெருக்க முறையில் புதிய ரகங்களை உருவாக்க முடியும். சிரோஹி, ஜம்னாபாரி, சுர்டி, தெல்லிச்சேரி, பீட்டல், மலபாரி, பார்பாரி, குஜராத்தி போன்றவைகள் புகழ் பெற்ற இந்திய ராகங்களாகும். கறவை ரகங்கள் பண்ணை முறைக்கு சிறந்தவையாகும்.

    ஒரு சிறிய பண்ணை அமைப்பதற்கு நல்ல காற்றோட்டமுள்ள ஒரு சிறிய கொட்டகை (Shed) போதுமானதாகும். நெல்லின் உமியும், நிலக்கடலையின் ஓடுகளையும் கலந்து பரப்பிவைத்த தரை பரப்பு ஆடு வளர்ப்புக்கு உகந்தது. இக்கலவையின் உயிரியல் செயல்பாடு கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் மித வெப்பமாகவும் தரைப் பரப்பை வைத்திருக்கும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை இக்கலவையை மாற்றினால் போதும்.

    தரைக் கலவையை தினமும் கிளறி விடுவதால் துர்நாற்றத்தை போக்க முடியும்.

    தரைக் கலவையில் சாணமும், மூத்திரமும் நன்கு கலந்து செறிவூட்டப்பட்ட இயற்கை உரமாக மாறும். முதிர்ந்த ஆடுகளின் வருடம் கூட கூட சாணத்தின் தரமும் கூடும்.

    ஆடு ஆரோக்கியமான பிராணியாகவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளதாக இருந்தாலும் பாதங்களிலும், வாயிலும் நோய் தோற்று வராமல் பார்த்துக் கொள்வது அவசியம். வருடத்திற்கு இரு முறை வயிற்றுப் புழு வராமலிருக்கவும், ஆரோக்கியத்தை காக்கவும் வேப்பிலையை அரைத்துக் கொடுக்க வேண்டும்.

    ஆட்டுப்பன்னையை கோழிப்பண்ணையை பராமரிப்பது போன்று எளிதாக பராமரிக்கலாம். இது சிக்கனமானது. வருமானம் கொழிக்கும் தொழிலாகும்.

    தண்ணீர் ஆட்டிற்கு விலை மலிவான உணவாகும். ஆனால் பெரும்பாலும் கொடுக்கப்படுவது இல்லை. இது தவறாகும்.

    மேலும் விபரங்களுக்கு:

    +917502002212

    Wednesday, 16 October 2013

    முயல் வளர்த்தால் முன்னேறலாம்!

    ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போல முயல் வளர்ப்பு தொழிலும் மிகுந்த லாபம் தரக் கூடியது. இத்தொழிலின் முக்கியத்துவம் கருதி, கோவை கால்நடை பல்கலைக்கழகத்தில் முயல் வளர்ப்பு பற்றி பயிற்சி வழங்கப்படுகிறது. முழுநேரமாகவோ, பகுதி நேரமாகவோ முயல் வளர்த்தால் முன்னேற்றம் நிச்சயம் என்கிறார் கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த செல்வம். டெய்லரான இவர், பகுதி நேரமாக வீட்டிலேயே முயல் வளர்க்க துவங்கினார். இப்போது ஏகப்பட்ட கிராக்கி. தொழிலை விரிவாக்க திட்டமிட்டுள்ளார். அவர் கூறியதாவது:
    முயல் குட்டி ஒரு மாசம் வரை தாயுடன் இருக்கணும்அதுவரை தாய்ப்பால் குடிக்கணும். முதல்ல... 20 நாளில் குட்டியை பிரிச்சுட்டேன். 40 குட்டிகள் இறந்திடுச்சு. கோவை கால்நடை பல்கலை.யில் முயல் வளர்ப்பு பயிற்சி கத்து கொடுத்தாங்க. அவங்க சொன்னபடி முயல் வளர்க்க ஆரம்பிச்சேன். அப்புறம் ஒரு  குட்டியைக் கூட நான் இழக்கல.முயலையோ, முயல் கறியையோ முதலில் யாரும் வாங்கல. சமைக்கத் தெரியாது; ருசி பழக்கமில்லைனு சொன்னாங்க. நானே அதை சமைத்து அக்கம்பக்கத்தில் உள்ளவங்களுக்குக் கொடுத்தேன். அப்புறம் அவங்களுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. இப்போ நல்ல கிராக்கி. ஒரு கிலோ ரூ.200க்கு விக்கறேன்.முயல் இறைச்சி கடைக்காரர்கள் முயலை எடைபோட்டு உயிரோடு வாங்கிச் செல்கிறார்கள். அவர்கள் இறைச்சியை கிலோ ரூ.250க்கு மேல் விலை வைத்து விற்கிறார்கள்
    4
    முயல் குட்டி மூலம் ஒரு ஆண்டில் 300 குட்டிகள் கிடைத்தது. இதன் மூலம் மாதம் சராசரியாக ரூ.4 ஆயிரம் வரை வருவாய். குட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க வருவாயும் அதிகரிக்கும்
    இவ்வாறு செல்வம் கூறினார்ரூ.25 ஆயிரம் போதும்
    ஒரு முயல் ரூ.500 வீதம், 2 ஆண், 10 பெண் முயல்கள். கூண்டு, உணவு தானியம் என மொத்த முதலீடு ரூ.25 ஆயிரம். வீட்டு முற்றம், மொட்டை மாடி, தோட்டம், காலியிடத்தில் வளர்க்கலாம். காற்றோட்டமான இடம் தேவை. கூண்டு முறையில் வளர்க்க 50 செ.மீ. உயரம், 60 செ.மீ. அகலத்துடன் கூண்டு இருக்க வேண்டும்கூண்டின் நீளம் தேவைக்கு ஏற்ப அமைத்து கொள்ளலாம். கூண்டின் அடிப்பாகம் எலி, பாம்புகள் நுழையாதவாறு 90 செ.மீ. உயரத்தில் இருக்க வேண்டும்
    உற்பத்தி 5வது மாதம் முதல், பெண் முயல்கள் இனப்பெருக்கத்தை துவங்கும். ஒரு முயல் 3 ஆண்டு உயிர் வாழும். 6 மாதத்துக்கொரு முறை 6 முதல் 10 குட்டி போடும். 3 மாதத்தில் இருந்து இறைச்சிக்கு பயன்படுத்தலாம். ரோமம், தோலையும் விற்கலாம்.

    வகைகள் 

    இமாலயன், சோவியத் சின்சில்லா, டச்சு, ஆல்பினோ வகை இனங்கள் 2 முதல் 3 கிலோ எடை வரை வளரும். இறைச்சிக்காக பயன்படுத்தலாம். நியூசிலாந்து வெள்ளை, நியூசிலாந்து சிவப்பு, கலிபோர்னியா வகை 3 முதல் 4 கிலோ எடை வரை வளரும். முயல்களில் வெள்ளை ஜெயின்ட், சாம்பல் நிற ஜெயின்ட், பிளமிஸ் ஜெயின்ட் இனங்கள் 4 முதல் 6 கிலோ எடை வரை வளரும்ரோமம் விற்றால் காசு சிறந்த ரக முடி 9 மாதத்தில் இருந்து கிடைக்கும். ஆண்டுக்கு பெண் முயல் 1 கிலோ முடியும், ஆண் முயல் 750 கிராம் முடியும் கொடுக்கும். முயல் தோலை பதனிட்டு நல்ல விலைக்கு விற்கலாம். முயல் தோலில் பர்ஸ், கையுறை, குல்லா, பொம்மை செய்யலாம்முயல் இறைச்சியை பிரியாணி, சில்லிரோஸ்ட், சூப், ஊறுகாய் தயாரிக்க பயன்படுத்தலாம்சந்தை வாய்ப்பு  ஒரு கிலோ முயல் கறி ரூ.200க்கு விற்கலாம். நடமாடும் ஊர்திகள், முயல்கறி ஸ்டால், மொத்தக் கொள்முதல் விற்பனை நிலையங்கள்விடுதிகள், ஓட்டல்களுக்கு சப்ளை செய்யலாம்.கறியில் மருத்துவ குணம் 
    முயல் இறைச்சியில் அதிக எலும்புகள் இருக்காது. குறைந்த அளவு கொழுப்பு, அதிக புரதம், உயிர்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. முயல் இறைச்சி சாப்பிட்டால் குடல்புண், ஜீரண பிரச்னை வராது. வாதம் குறையும். உடல் பித்தம், காசநோய், இருமல், வாயு தொல்லை, மலச்சிக்கல் ஏற்படாது. இதய நோய் உள்ளவர்கள் கூட முயல் கறி சாப்பிடலாம். ஆடு, கோழி இறைச்சியைவிட இதில் கொழுப்பு குறைவு.தினமும் 2 மணி நேரம் போதும்
    முயலுக்கு பச்சை தாவரங்கள், காய்கள், பழங்கள், குதிரை மசால், வேலி மசால், முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, பீட்ரூட், புற்கள், பலா இலை, முள் முருங்கை போன்றவற்றை கொடுக்கலாம். இளம் முயல்கள் வேகமாக வளர்ச்சி அடைய சத்து மிகுந்த கலப்பு தீவனம் அவசியம்
    கலப்பு தீவனத்தில் உடைத்த மக்காச்சோளம், உடைத்த கம்பு, கடலை புண்ணாக்கு, கோதுமை தவிடு, தாது உப்பு கலவை ஆகியவற்றை கலந்து கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு முயலுக்கு 200 கிராம் முதல் 500 கிராம் வரை உணவு கொடுக்க வேண்டும். வீட்டில் வீணாகும் காய்கறிகளை கொடுக்கலாம்முயல் வளர்க்க தினமும் 2 மணி நேரம் செலவழித்தால் போதும். நல்ல லாபம் பார்க்கலாம். ரோமத்திற்காக வளர்க்கப்படும் அங்கோரா இனங்களை தனித்தனியாக கூண்டிலிட்டு வளர்க்க வேண்டும்கூண்டில் வைக்கோல் படுக்கை இட்டு வளர்ப்பதால் முயல்களுக்கு புண்கள் ஏற்படுவதை தடுக்கலாம். அதோடு 25 சதவீதம் அதிக ரோமம் கிடைக்கும். 3 மாதத்திற்கு ஒரு முறை முடியை வெட்டி எடுக்கலாம்பெண் முயல் அமைதியில்லாமல், வாயை தரையிலோ அல்லது கூண்டிலோ அடிக்கடி தேய்த்தால் சினை அறிகுறியாகும். சினை அறிகுறி தெரிந்தவுடன் பெண் முயலை ஆண் முயல் இருக்கும் கூண்டுக்கு எடுத்து சென்று இனச்சேர்க்கைக்கு விட வேண்டும். கருவுற்ற நாளில் இருந்து 29 நாட்களுக்குள் பெண் முயல் குட்டிகளை ஈனும்
    வளர்ப்பு முயல்கள் எங்கு கிடைக்கும்?முயல் பண்ணை அமைக்க விரும்புவோர் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் உள்ள முயல் பண்ணையில் மொத்தமாக முயல் வாங்கலாம். ஊட்டி சாந்தி நல்லாவில் உள்ள செம்மறி ஆடு ஆராய்ச்சி நிலையத்திலும் கிடைக்கும்
    முயல்களை 2 கிலோ உடல் எடை உள்ளபோது வாங்க வேண்டும். பெண் முயலுக்கு குறைந்த பட்சம் 8 பால் காம்புகள் இருக்க வேண்டும். பெண், ஆண் முயல்களை தனித்தனியே வெவ்வேறு பண்ணைகளில் இருந்து வாங்க வேண்டும். அல்லது முயல் வளர்ப்போரிடமும் பெற்றுக் கொள்ளலாம்

    பல்கலை.யில் பயிற்சிகோவை சரவணம்பட்டி கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மையத் தலைவர் சிவக்குமார் கூறியதாவது
    குறைந்த செலவு, இடம், முதலீடு, குறுகிய காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும் தொழிலாக முயல் வளர்ப்பு உள்ளது. சாதாரண தீவனத்தை தின்று சிறந்த இறைச்சியாக மாற்றும் தன்மை முயலுக்கு உண்டு. முயலை இறைச்சிக்காகவும், தோல் மற்றும் ரோமத்திற்காகவும் வளர்க்கலாம். முயல் வளர்க்க கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மையம் பயிற்சி அளித்து வருகிறது. கிராமத்தில் குறைந்தபட்சம் 10 பேருக்கு ஒரே நேரத்தில் பயிற்சி தேவைப்பட்டால் நேரிலேயே வந்து பயிற்சி அளிக்கிறோம். தகவல் அறிய விரும்புபவர்கள் அருகிலுள்ள கால்நடை பல்கலை பயிற்சி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
    முயலை காதைப்பிடித்து தூக்கக்கூடாது. முதுகு பகுதியை பிடித்து தூக்க வேண்டும். வளர்ந்த முயல்களை முதுகு பகுதியை ஒரு கையாலும், அதன் வயிற்று பகுதியை ஒரு கையாலும் தாங்கிப் பிடித்து தூக்க வேண்டும்